முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை.

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை இன்னும் சற்று நேரத்தில் ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறிய நிலையில், இன்று இபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை  கூட்டம்  நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment