பறவைக் காய்ச்சல் எதிரொலி.. கேரளாவிலிருந்து கோழி இறக்குமதிக்கு தற்காலிக தடை..!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இன்று தனது இல்லத்தில் மூத்த அதிகாரிகளுடன் அவசரக் கூட்டத்தை நடத்தினார். அப்போது, கோழி வணிகம் மற்றும் பிற பறவைகளின் வர்த்தகத்தை தென்னிந்தியாவின் சில மாநிலங்களுடன் குறுகிய காலத்திற்கு நிறுத்த முடிவு செய்தார் என கூறப்படுகிறது.

மத்தியப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள எந்த கோழி பண்ணையிலும் பறவைக் காய்ச்சல் பரவவில்லை. இதனால், கேரளா மற்றும் பிற பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து கோழி இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதாகவும், நிலைமையை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்று சவுகான் கூறினார். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மையம் வழங்கிய வழிகாட்டுதல்கள் குறித்து மாவட்டங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

 

author avatar
murugan