உன்னை இப்படி வளர்த்ததற்கு உங்க அம்மா வெட்க படனும்! விஷ்ணுவை அசிங்க படுத்திய விசித்ரா!

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி விறு விறுப்பாக போய்கொண்டு இருக்கும் நிலையில், இன்று பலருக்கும் பிடித்த போட்டியாளராக இருக்கும் விசித்ரா பேசிய விதம் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே விஷ்னு மற்றும் விசித்ரா இருவருக்கும் இடையே கடுமையான வாக்கு வாதங்கள் போய் கொண்டு இருக்கிறது.

இந்த சுழலில் இவர்களுடைய வாக்கு வாதம் இன்று பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.  உன்னை இப்படி வளர்த்ததற்கு உங்க அம்மா வெட்க படனும் என்பது போல விசித்ரா  விஷ்னுவை பார்த்து கூறியுள்ளார். இருவருக்கும் இடையே இன்று வாக்கு வாதம் ஏற்பட்ட போது ஒருவருக்கு சரியாக மரியாதையை கொடுக்க கற்றுக்கொள். எனக்கும் பையன்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் எல்லாம் உன்னை மாதிரி இல்லை. உன்னை பார்த்து உண்னிடம் பேசினார்கள் என்றாலே பயந்துவிடுவார்கள்.  மரியாதை கொடுக்க தெரியாத உன்னை இப்படி வளர்த்ததற்கு உங்க அம்மா வெட்க படனும் இந்த வீடியோவை எல்லாம் வெளிய பார்த்து கொண்டு தான் இருப்பார்கள். நீ இப்படி மாத்தி மாத்தி பேசுவது எல்லாத்தையும் என்னுடைய பையன்கள் பார்த்துக்கொண்டு தான் இருப்பார்கள்” என விஷ்னுவை பார்த்து விசித்ரா கூறினார்.

வசூலில் மிரட்டும் கான்ஜுரிங் கண்ணப்பன்! முதல் நாளில் இத்தனை கோடியா?

இதனை பார்த்த பலரும் அவரை பற்றி பேசினால் சரி அவருடைய பெற்றோர்களை பற்றி ஏன் பேசவேண்டும் என விசித்ரா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.  விஷ்னுவை மட்டுமின்றி அர்ச்சனாவுடனும் விசித்ரா வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இப்படி இவர் தொடர்ச்சியாக போட்டியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவது அவருடைய ரசிகர்களை சற்று கடுப்பாக்கி இருக்கிறது.

மேலும், இதைப்போலவே ஏற்கனவே, பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு வாங்கி கொண்டு வெளியே சென்ற பிரதீப் ஆண்டனியுடனும் விசித்ரா  பலமுறை வாக்கு வாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். ஒரு முறை வாக்கு வாதம் ரொம்ப பெரிதாகி என்னிடம் பேசாதா விளையாட்டுக்கு கூட பேசினால் நான் அடித்துவிடுவேன் என்பது போலவும் விசித்ரா தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.