டாக்.ராதாகிருஷ்ணன் விருது – புதிய நடைமுறைகள் வெளியீடு

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதிற்கு டியூசன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை பரிந்துரைக்கக்கூடாது என அறிவுறுத்தல். 

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதிற்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 38 மாவட்டங்களில் இருந்து 386 ஆசிரியர்களை விருதுக்கு தேர்வு செய்ய புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது

அதில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு  டியூசன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை பரிந்துரைக்கக்கூடாது. அரசியல் தொடர்பில் உள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் மாநில நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க கூடாது.

தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் ceo தலைமையில் ஐந்து பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு பரிந்துரைக்க  ஐந்தாண்டுகள் எந்த புகாருக்கும் இடம் தராமல் ஆசிரியர் பணியாற்றி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment