இணைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இந்திய குழந்தைகள்..

இணைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இந்திய குழந்தைகள்..

இன்று வெளியான அறிக்கையின்படி, 85 சதவீதம் அதாவது 10ல் 8 இந்தியக் குழந்தைகள் இணைய அச்சுறுத்தலை சர்வதேச சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாக எதிர்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் உள்ள இளம் பெண்களும் சர்வதேச அளவில் 10 முதல் 14 வயதுடைய பெண்கள் 32 சதவீதம் மற்றும் 15 முதல் 16 வயதுடைய பெண்கள் 34 சதவீதம், 17 முதல் 18 வயதுடைய பெண்கள் 21 சதவீதம்  பாலியல் துன்புறுத்தல் அனுபவிக்கின்றனர்.

இனவெறி தவிர இணைய அச்சுறுத்தலின் தீவிர வடிவங்களில் ட்ரோலிங் (36 சதவீதம்), தனிப்பட்ட தாக்குதல் (29 சதவீதம்), பாலியல் துன்புறுத்தல் (30 சதவீதம்), தனிப்பட்ட தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தல் (28 சதவீதம்) மற்றும் டாக்ஸிங் (23 சதவீதம் அனுமதியின்றி தனிப்பட்ட தகவல்களை வெளியிடுதல்) ஆகியவை அடங்கும்.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முதல் ஸ்னாப்சாட் மற்றும் வாட்ஸ்அப் வரையிலான பதினான்கு கணக்கெடுப்பு தளங்களில் மற்ற நாடுகளில் உள்ள குழந்தைகளை விட இந்திய குழந்தைகள் 1.5 மடங்கு அதிகமாக சைபர்புல்லிங் செய்வதாக தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய 45 சதவீத இந்தியக் குழந்தைகள் தங்கள் இணைய அச்சுறுத்தல் அனுபவங்களை பெற்றோரிடமிருந்து மறைப்பதாகக் கூறியுள்ளனர்.

ஜூன் 15 முதல் ஜூலை 5 வரை 10 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11,687 பெற்றோர்களும் அவர்களது குழந்தைகளும் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், பிரேசில் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து மின்னஞ்சல்-கணிப்பை முடித்துள்ளனர்.

இந்தியாவில் இணைய அச்சுறுத்தல் ஆபத்தான உச்சத்தை எட்டுகிறது, ஏனெனில் மூன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இணைய இனவெறி, பாலியல் துன்புறுத்தல் மற்றும் உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தல்களை 10 வயதிலேயே எதிர்கொள்கின்றனர்” என்று மெக்காஃபி நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி ககன் சிங் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

உங்களுக்காக