சீனாவைப்போல எதிர்க்கட்சியே வேண்டாமா? – பீட்டர் அல்போன்ஸ்

மூடிமறைக்கப்படும் அக்கிரமங்களை வெளிக்கொணர, போராடுவதற்காகத்தானே எதிர்க்கட்சிகள்! சீனாவைப்போல எதிர்க்கட்சியே வேண்டாமா? என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட். 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மாநிலங்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காரணத்தால், திமுக எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், கிரிராஜன், கனிமொழி சோமு உள்பட 19 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேபோல் நேற்று முன்தினம் 4 காங்கிரஸ் எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாராளுமன்ற ஜனநாயகத்தில்.. மக்கள் பிரச்சினைகளுக்காக, அரசின் தவறுகளை கண்டிக்க, அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுத்து நிறுத்த, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நிவாரணம் கேட்க, மூடிமறைக்கப்படும் அக்கிரமங்களை வெளிக்கொணர, போராடுவதற்காகத்தானே எதிர்க்கட்சிகள்! சீனாவைப்போல எதிர்க்கட்சியே வேண்டாமா?

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment