பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 18 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா…?

பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடமாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த வருடத்திற்கான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியையும் வழக்கம் போல நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார்கள்.

கடந்த வருடம் போல் அல்லாமல் இந்த வருடம் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்படுகிறார்கள். அந்த வகையில் முதலாவதாக கானா பாடகி இசை வாணியும், இரண்டாவது போட்டியாளராக சீரியல் நடிகர் ராஜுவும், மூன்றாவதாக மாடல் மதுமிதாவும், நான்காவதாக தொகுப்பாளர் அபிஷேக்கும் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

ஐந்தாவது போட்டியாளராக மாடலும், நடிகையுமாகிய திருநங்கை நமீதா அவர்களும், ஆறாவது போட்டியாளராக பிரபல தொகுப்பாளினி பிரியங்கா அவர்களும், ஏழாவது போட்டியாளராக ஜெமினி கணேசனின் பேரன் அபினை அவர்களும், எட்டாவது போட்டியாளராக நடிகை பவானி ரெட்டி அவர்களும், ஒன்பதாவது போட்டியாளராக நாட்டுப்புற கலைஞர் சின்ன பொண்ணு அவர்களும், பத்தாவது போட்டியாளராக மாடல் அழகி நதியா அவர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பதினோராவது போட்டியாளராக நடிகர் வருண், 12 வது போட்டியாளராக தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமாகிய இமான் அண்ணாச்சியும், 13 வது போட்டியாளராக மாடல் ஸ்ருதியும், 14 வது போட்டியாளராக மாடல் அழகி அக்ஷராவும், 15 வது போட்டியாளராக ராப் இசை பாடகி ஐக்கி பெர்ரியும், 16 வது போட்டியாளராக நாடக கலைஞர் தமிழ் செல்வியும், 17வது போட்டியாளராக மாஸ்டர் படத்தில் விஜயின் மாணவராக நடித்த சிபி சந்திரனும், 18வது போட்டியாளராக நடிகர் நிரூப்  நந்தகுமார் அவர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

Rebekal

Recent Posts

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

2 hours ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

2 hours ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

2 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

2 hours ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

3 hours ago

விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிக்கிறீங்களா? கவின் சொன்ன பதில்!!

Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…

3 hours ago