திமுக வெள்ளை அறிக்கை வெளியீடு – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி!

கொடுத்த வாக்குறுதியில் இருந்து தப்பித்துக்கொள்ள வெள்ளை அறிக்கை முற்றுப்புள்ளியா? முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதிநிலை தொடர்பான 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். இதில் கடந்த 5 ஆண்டு காலத்தில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயாக வருவாய் பற்றாக்குறை உயர்ந்துள்ளது என தெரிவித்தார். இதுபோன்று ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது என்றும் கூறினார்.

திமுக வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து அதிமுக அமைச்சர்கள், விமர்சித்து வருகின்றனர். அதன்படி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், வெள்ளை அறிக்கையை வெளியிட்டு திமுக அரசு மக்களை திசை திருப்புகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், முன்கூட்டியே வெள்ளை அறிக்கை வெளியிடுவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவரை தொடர்ந்து வெள்ளை அறிக்கை குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், கொடுத்த வாக்குறுதியை செய்து கொடுப்பதற்கு இந்த வெள்ளை அறிக்கை தொடக்க புள்ளியா அல்லது கொடுத்த வாக்குறுதியில் இருந்து தப்பித்துக்கொள்ள வெள்ளை அறிக்கை முற்றுப்புள்ளியா? கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்