திமுக அமைத்துள்ளது வெற்றி கூட்டணி…! மற்றவர்கள் அமைத்துள்ளது சர்க்கஸ் கூட்டணி…! – அமைச்சர் தங்கம் தென்னரசு

அதிமுக அண்ணாவின் பெயரில் கட்சி, கொடி ஆகியவற்றை வைத்துக் கொண்டு நாடகமாடுகிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், திமுக சார்பில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி கூட்டணியாக இருப்பதாகவும், மற்றவர்கள் அமைத்துள்ளது சர்க்கஸ் கூட்டணி என விமர்சித்தார். அண்ணா பெயரிலான திட்டங்களை முடக்கியது அதிமுக தான். கலைஞர் கருணாநிதி உருவாக்கிய அண்ணா நூலகத்தை நிர்முலமாக்கியதும் அதிமுக தான். அதிமுக அண்ணாவின் பெயரில் கட்சி, கொடி ஆகியவற்றை வைத்துக் கொண்டு நாடகமாடுகிறார் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.