#BREAKING : நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – திமுக அறிவிப்பு

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள்  கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .  

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், நாளை காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட  செயலாளர்கள் கூட்டம் எனது தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் .இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.