பொன்னியின் செல்வனை நுணுக்கமாக கவனித்தால் காரணம் தெரியும்.! இயக்குனர் மோகன்.ஜி விளக்கம்.!

ஹிந்துஸ்தான் என்ற வார்த்தை 2000 வருடத்திற்கு முன்பு இருந்தே இருக்கிறது. இந்து எனும் வார்த்தை ராஜ ராஜ சோழனுக்கு பொருந்தும். – என திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கருத்து தெரிவித்துள்ளார். 

திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கிறார்கள். ராஜராஜ சோழனை கூட இந்து மதத்தை சார்ந்தவர் என மாறிவிட்டார்கள்.’ என பேசியிருந்தார்.

ராஜராஜ சோழன் சைவ மதத்தை சார்ந்தவர் , சோழர் காலத்தில் இந்து மதம் ஒன்று இல்லை. சைவம், வைணவம் ஆகியவை மட்டுமே இருந்தது. என் வெற்றிமாறனுக்கு ஆதரவாக ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், விசிக தலைவர் திருமாவளவன் போன்ற அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த வாதத்திற்கு எதிராக அண்மையில் நடிகரும், அரசியல் பிரமுகருமான சரத்குமார், ராஜ ராஜ சோழன் சைவமா, இந்துவா, வைணவமா என பார்ப்பதை விடுத்து அவரது புகழை பரப்பலாமே, என தனது  கருத்தை கூறினார்.

தற்போது, திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மோகன்.ஜி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘ வரலாற்று பற்றி பொன்னியின் செல்வன் வெளியான பிறகு மக்கள் தெரிந்து கொள்ள ஆரம்பித்து உள்ளனர். பொன்னியின் செல்வன் வெளியான பிறகு சர்ச்சைகள் எழுந்துள்ளது. இந்து அறநிலையத்துறையின் பெயரை மாற்ற சிலர் சொல்றாங்க. அது அரசின் வேலை’ என தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், ‘ ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் முன்னால் பார்த்தீர்கள் என்றால் பெருவடிவம் ஒன்று செதுக்கப்பட்டிருக்கும். அது கைலாய மலையின் வடிவம். ராஜராஜ சோழனை இந்த வட்டத்திற்குள் சுறுக்கிவிட முடியாது. அவர்கள் பாரத தேசம் சுற்றியவர்கள். பெரிய கோவிலில் வாராகி அம்மனுக்கு கோவில் உள்ளது.’ எனவும் குறிப்பிட்டார்.

மேலும் பேசுகையில் , ‘ ராஜராஜ சோழன் விஷ்ணு கோவிலுக்கு கோடை வழங்கியுள்ளது பலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்காசியத்தை கட்டி ஆண்டவர்கள் சோழர்கள். அவர் எந்த கல்வெட்டிலும் சைவ மதத்தை சார்ந்தவர் என்பதை குறிப்பிடவில்லை. அப்படி சொல்பவர்கள் தான் அதனை காட்ட வேண்டும். ‘ எனவும்,

‘ ஹிந்துஸ்தான் என்ற வார்த்தை 2000 வருடத்திற்கு முன்பு இருந்தே இருக்கிறது. இந்து எனும் வார்த்தை ராஜ ராஜ சோழனுக்கு பொருந்தும்.
இங்கு ஒற்றுமை உருவாகிவிட கூடாது என சிலர் நினைக்கிறார்கள். கல்கி எழுதிய நாவல் ஓர் புனைவு கதை. அது உண்மையல்ல. ‘ என இயக்குனர் மோகன் ஜி பேசினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment