நாட்டு கொடியையும் தாங்கி பிடித்து..! தன் ரசிகரை பழிச் சொல்லில் இருந்து காப்பாற்றிய காவலன்..!

32

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி T20 போட்டி  ஹாமில்டனில் இன்று நடைபெற்றது.இதில்டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.பின்னர்  213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடிமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

கடைசியாக இந்திய அணி20 ஓவர்களில்  6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வி அடைந்தது. இந்நிலையில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 2-1 என கணக்கில் வென்றது.ஏற்கனவே இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றதுக்கு பழி தீர்த்துக்கொண்டது நியூசிலாந்து அணி.

இந்த நிகழ்வில் தற்போது தோனியின் செயல் வைரலாகி வருகிறது.அது என்னவென்றால் இந்திய தேசியக் கொடியுடன் கிரிக்கெட் மைதானத்துக்குள் நுழைந்த ரசிகர் ஒருவர் தல என்று வர்ணிக்கப்படும் தோனியின் காலில் விழுந்தார்.

உடனே தோனி தன் காலில் தேசியக்கொடி படக் கூடாது என்பதற்காக  ரசிகரை தூக்குவதற்கு முன்னர் அவரிடம் இருந்த தேசியக் கொடியை வாங்கினார் பின் தன் ரசிரை தூக்கி தேசியக் கோடியை இப்படியா கீழே போடுவது என்று தன் ரசிகரை மற்றவர்கள் வசைபட கூடாது என்ற நோக்கிடனும் நாட்டு பற்றும் ரசிக பற்றையும் தூக்கி பிடித்துள்ளார் அது தான் தோனி என்று சமூக வலையதளங்களில் கருத்துகளை தெறிக்கவிட்டு  வருகின்றனர் அவருடைய ரசிகர்கள்.மேலும் #dhoniflag  என்ற ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது.