பெருங்குடலை சுத்தம் செய்ய கூடிய சிறப்பான 5 வழிகள் இதோ!

உடல் உறுப்புகளில் மிக முக்கிய உறுப்பு இந்த பெருங்குடல் தான். பெருங்குடலில் ஏதேனும் பிரச்சினை வந்தால் அது நமக்கு மிக பெரிய ஆபாய நிலையை குறிக்கிறது. இந்த அபாயத்திற்கு மூல காரணம் பெருங்குடலில் சேர்ந்துள்ள அழுக்குகள் தான். பல ஆண்டுகளாக நாம் சாப்பிட்ட தேவையற்ற பொருட்களின் சேர்வை தான் இந்த நச்சு தன்மைமிக்க அழுக்குகள்.

இதை அவ்வப்போது வெளியேற்றாவிடில் ஆபத்து நமக்கு தான். இதை மிக எளிய முறையில் சுத்தம் செய்து விடலாம். அந்த 5 வழிகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு #1
ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரை எடுத்து கொண்டு அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும். பிறகு 1 ஸ்பூன் தேன் மற்றும் உப்பு சேர்த்து கலந்து குடித்து வரலாம். இந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மிக விரைவிலே அழுக்குகளை வெளியேற்றி விடலாம்.

குறிப்பு #2
1 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை 1 கிளாஸ் மிதமான சூட்டில் உள்ள நீரில் கலந்து கொள்ளவும். பின் இதில் 1 ஸ்பூன் தேன் கலந்து தினமும் 1 முறை குடித்து வந்தால் நச்சுக்கள் எளிதாக வெளியேறி விடும்.

குறிப்பு #3
எப்போதுமே காய்கறிகள் நமது உடலுக்கு அதிக சக்தியை தருபவை. அதே போன்று உடலில் இருக்க கூடிய அழுக்குகளை போக்கவும் இது உதவுகிறது. இதற்கு கேரட், தக்காளி, வெள்ளரிக்காய் முதலியவற்றில் ஏதேனும் ஒன்றை ஜுஸாக அரைத்து குடித்து வந்தால் போதும். உடனடியாக பெருங்குடலில் உள்ள அழுக்குகள் வெளியேறி விடும்.

குறிப்பு #4
2 ஸ்பூன் இஞ்சி சாற்றை 1 கிளாஸ் வெது வெதுப்பான நீரில் கலந்து கொள்ள வேண்டும். பின் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை இதனுடன் கலந்து தினமும் குடித்து வரலாம். இது பெருங்குடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதோடு உடலுக்கு வலுவையும் அதிகரிக்கவும்.

குறிப்பு #5
200 மி.லி அளவு கற்றாழை சாற்றை எடுத்து கொள்ளவும். பிறகு இதனுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 கப் நீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த நீரை 1 நாளைக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து குடித்து வரலாம். உடனடி பெருங்குடல் சுத்தத்திற்கு கற்றாழை சாறு உதவும்.

Leave a Comment