அரிசி தண்ணீரை வைத்து முடியை எப்படி வளர செய்வது? இதோ சீன நாட்டின் இரகசியம் உங்களுக்காக…

முடியினால் ஏற்பட கூடிய பிரச்சினைகள் ஒன்றா இரண்டா..? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் இது பிரச்சினையை தருகிறது. முடியினால் ஏற்பட கூடிய அனைத்து பிரச்சினைக்கும் வெறும் அரிசி நீர் சிறப்பான தீர்வை தருகிறது என ஆய்வுகள் சொல்கின்றன.

அரிசி நீரில் உள்ள பலவித ஊட்டச்சத்துக்கள் தான் இதன் அத்தனை அற்புதங்களுக்கும் முக்கிய காரணம். இனி அரிசி தண்ணீரை வைத்து எப்படி முடியை வளர வைப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.

சத்துக்கள்
அரிசி நீரில் இனோசிடால், கார்போஹைட்ரெட், போன்ற சத்துக்கள் உள்ளது. இதனால் முடியின் சத்து அதிகரிக்கும். பல நாட்களாக முடி பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கும் உங்களுக்காகவே இந்த நீர் உள்ளது. முடி கொட்டுதல், முடி உடைதல், முடி அடர்த்தி குறைதல் முதலிய பிரச்சினைகளுக்கு இது தீர்வாக இருக்கும்.

பாரம்பரிய முறை
சீன நாட்டு மக்கள் மற்றும் ஜப்பான் நாட்டு மக்கள் இந்த அரிசி தண்ணீரை புனித நீராக கருதுகின்றனர். முடியின் வளர்ச்சிக்கு இந்த நீரை தான் பெரும்பாலும் அங்கு பயன்படுத்துகின்றனர். இந்த அரிசி நீரை வைத்து ஒரு கிராமமே கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.

தயாரிப்பு முறை
1 கப் அரிசியை எடுத்து கொண்டு அந்த அரிசி மூழ்கும் வரை நீரை ஊற்றி ஊற வைத்து கொள்ளவும். பிறகு இதனை வேக வைத்து இதன் நீரை மட்டும் தனியாக வடிகட்டி, ஆற வைத்து கொள்ளவும். பின் இதை முடியில் தடவி 30 நிமிடம் வரை ஊற வைத்து, தலைக்கு குளிக்கவும். இப்படி வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முடியின் பல பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.

நொதிக்க வைத்த நீர்
இதை வேறு முறையிலும் நாம் பயன்படுத்த இயலும். இந்த வடிகட்டிய நீரை எடுத்து கொண்டு அதனுடன் 1 ஸ்பூன் கடுகு பொடியை சேர்த்து கொள்ளவும். நன்றாக கலக்கி இவற்றுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து தலைக்கு தடவலாம். 25 நிமிடம் இதை தலையில் ஊற வைத்து குளித்து வந்தால் முடி கொட்டிய இடத்தில் முடி வேகமாக வளரும்.

Leave a Comment