#Breaking : கோவை கார் வெடிப்பு.! தலைமை செயலகத்தில் டிஜிபி முக்கிய ஆலோசனை.!

கோவை கார் வெடிப்பு விபத்து தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு, தமிழக தலைமைசெயலர் இறையன்பு ஆகியோரதலைமை செயலகத்தில்  மத்திய உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, ஏடிஜிபி டேவிட்சன் தேவர்சிவாதம் ஆகியோர் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்தார்.

இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஜமேஷ் முபினுக்கு உதவி செய்த 5 பேரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், கோவையில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ அதிகாரிகள் தனி தனி குழுக்களாக பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, டிஜிபி சைலேந்திர பாபு, தமிழக தலைமைசெயலர் இறையன்பு ஆகியோரதலைமை செயலகத்தில்  மத்திய உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, ஏடிஜிபி டேவிட்சன் தேவர்சிவாதம் ஆகியோர் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை கார் வெடிப்பு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இனி எடுக்கப்போகும் நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை குறித்து ஆலோசிக்க பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment