வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவற்றைத் தகர்த்து முன்னேறுங்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை வாய்ப்பு, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். இதுவே திராவிட மாடல் அரசின் செயல்பாடு என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. 

அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், நாட்டை செழிக்க செய்யக்கூடிய வல்லுநர்கள் மாணவர்கள்தான். தமிழர்கள் எப்போதும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்கள். கல்விக் கண்ணை திறப்பதை பெரும் பணியாக எண்ணியே திராவிடம் மாடல் அரசு செயல் பட்டு வருகிறது.

அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை வாய்ப்பு, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். இதுவே திராவிட மாடல் அரசின் செயல்பாடு ஆகும். அறிவாற்றல் தான் அனைத்திலும் வலிமையானது. அறிவு மட்டுமே ஒரே அளவுகோலில் வைத்து பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு, வாழ்க்கை தரம், சமூக வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்யவே தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஆர்வமாக முன் வருகின்றன. அதற்கு ஏற்ப இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment