டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது முறையாக சம்மன்!!

Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று ஜாமின் வழங்கப்பட்டது.

READ MORE – மதுபான கொள்கை வழக்கு.. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்…!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் எம்.பி சஞ்சய் சிங் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகிறது.

READ MORE – மக்களவை தேர்தல்: குறைந்தபட்ச ஊதிய உயர்வு, சுகாதாரம்..! தொழிலாளர்களுக்கான காங்கிரஸின் 5 வாக்குறுதிகள்

அமலாக்கத்துறை சார்பில் இதுவரை 8 முறை சம்மன் அனுப்பியும் ஒரு முறை கூட அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த நிலையில், அமலாக்கத்துறை அவருக்கு 9வது முறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, கெஜ்ரிவால் வரும் 21ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

READ MORE – மக்களவை தேர்தல்… எந்தந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக வாக்குப்பதிவு!

முன்னதாக, இந்த வழக்கில் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார், நீதிமன்றத்தில் ஆஜரான கெஜ்ரிவாலுக்கு நீதிபதி ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். மேலும், ரூ.15,000 பிணைதொகை மற்றும் ரூ.1 லட்சத்திற்கான உத்தரவாதம் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment