#IPL2022: குல்தீப் யாதவ் அதிரடி.. 44 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வி!

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி, 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டி, மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் மதியம் 3:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தனர்.

216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே – வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினார்கள். சிறப்பான தொடக்கத்தை கொடுத்த வெங்கடேஷ் ஐயர் 18 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். 8 ரன்கள் அடித்து ரஹானே தந்து விக்கெட்டை இழக்க, அவரையடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்தார்.

இவர்கள் கூட்டணியில் டெல்லி அணியின் ஸ்கொர் உயர, 30 ரன்கள் அடித்து நிதிஷ் ராணா தனது விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய ரஸல் 24 ரன்கள் அடித்தும், சாம் பில்லிங்ஸ் 15 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்கள். அவர்களைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

இறுதியாக கொல்கத்தா அணி, 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களை இழந்து 171 ரன்கள் அடித்து, 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பந்துவீச்சை பொறுத்தளவில் குல்தீப் யாதவ் தலா 4 விக்கெட்களும், கலில் அஹமது தலா 3 விக்கெட்களும், ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்கள்.