அடடா! இவ்வளவு நாளா தெரியாம போச்சே! இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால் இவ்வளவு நன்மைகள் ஏற்படுமா?

இன்றைய நாகரீகமான உலகில் 6 மாத குழந்தைகள் முதல் 90 வயது முதியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் இறைச்சி. இந்த இறைச்சி நமது உடலுக்கு எந்த அளவுக்கு சத்துக்களை தருகிறதோ, அந்த அளவுக்கு தீமைகளையும் ஏற்படுத்துகிறது.
பொதுவாக, மருத்துவர்கள் உணவு கட்டுப்பாடுகளை விதித்தால், அதில் முதலில் தவிர்க்கப்பட வேண்டிய உணவாக இருப்பது இறைச்சி தான். தற்போது இந்த பதிவில், இறைச்சி சாப்பிடுவதால் நமது உடலில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் பற்றி பார்ப்போம்.

உடல் எடை

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு தான். உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்புபவர்கள், இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினாலே உடல் எடை தானாக குறைந்து விடும்.

இதய நோய்

இன்று பலருக்கு மிகவும் சிறிய வயதிலேயே இதய நோய்களினால் பாதிக்கப்பட்டு விடுகின்றனர். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்தால், இதய நோய் பாதிப்புகள் குறையும்.
உடல் சூடு 
இன்று பலருக்கு ஏற்படும் உடல் சூடால், பல நோய்கள் ஏற்படுகிறது. இதற்கு மிகவும் முக்கியமான காரணம் இறைச்சி சாப்பிடுவது தான். எனவே இப்படிப்பட்டவர்கள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்தால், உடல் சூடு குறைந்து, அதனால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.
செரிமானம் 
இறைச்சி வகைகள் கடினமான உணவு வகைகளில் ஒன்று. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் கடினமான உணவுகளை உண்ணும் போது, செரிமானம் ஆவது மிகவும் கடினம். எனவே இறைச்சியை உண்பதை தவிர்த்தால், செரிமானம் சீராகும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.