கோவக்சினா? கோவிஷீல்டா? என பட்டிமன்றம் நடத்த வேண்டாம் – தமிழிசை

கொரோனா தடுப்பூசி இரண்டும் நல்லவை தான். கோவக்சினா? கோவிஷீல்டா? என பட்டிமன்றம் நடத்த வேண்டாம்.

இந்தியா முழுவதும் கொரோனா கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக, அனைத்து இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும், கோவாக்சின் மாறும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போட்டு வருகிற நிலையில், எந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. அதிகமாக கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கோவிஷீல்டு தடுப்பு மருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த தடுப்பூசி குறித்து, நோய்தடுப்பு விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து, பாதுகாப்பானது என்று கூறியுள்ளனர். கொரோனா தடுப்பூசி இரண்டும் நல்லவை தான். கோவக்சினா? கோவிஷீல்டா? என பட்டிமன்றம் நடத்த வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.