கொரோனா தொற்று அதிகரிப்பு.. மதுரையில் 20 தெருக்களை அடைப்பு- மாநகராட்சி அதிரடி!

மதுரையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று அதிகமாகவுள்ள 20 தெருக்களை அடைத்து மதுரை மாநகராட்சி உத்தரவு.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், மதுரையில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மதுரை மாநகரில் முதற்கட்டமாக 20 தெருக்கள் அடைக்கப்பட்டுள்ளன.

மேலும் 18 தெருக்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கொரோனா பரவல் அதிகரிக்கும் பகுதிகளில் முக்கியத்துவம் அளித்து தடுப்புப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 592 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.