பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகளில் கொரோனா.! சீனாவில் கண்டுபிடிப்பு.!

சீனாவில் உள்ள டாலியன் ( Dalian) துறைமுகத்தில் இருந்து பேக் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகளில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக யந்தாய் நகர ( Yantai city ) அரசு தெரிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸானது, தற்போது உலகம் முழுக்க பரவி லட்சகனாக்கானோரை பாதித்து வருகிறது. தற்போது சீனாவில் கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்துவிட்டது.

இந்த நேரத்தில், சீனாவில் உள்ள டாலியன் ( Dalian) துறைமுகத்தில் இருந்து பேக் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகளில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக யந்தாய் நகர ( Yantai city ) அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக டாலியன் துறைமுகத்திற்கு ஈக்வேடார் நாட்டிலிருந்து வந்த பதப்படுத்தப்பட்ட கடல் உணவு பேக்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக டாலியன் துறைமுக அதிகாரிகள் முன்னதாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.