‘படிப்பதற்கு வயது தடையில்லை’ – 11-ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்த 52 வயது அமைச்சர்!

11-ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்த 52 வயது அமைச்சர்.

ஜகர்நாத் மஹ்தோ அவர்கள் ஜார்கண்ட் மாநில மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றபோது, அவர் 10-வது வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தார். இதனால் அவர் தனது வாழ்வில் பல விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

படிப்பதற்கு வயது தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், அவர் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளார். 52 வயதான அமைச்சர், 25 ஆண்டுகளுக்கு பின் கல்வியை தொடர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘நான் எனது கல்வியை முடிப்பேன்,விவசாய வேலைகளைச் செய்து கொண்டே வகுப்புகளில் கலந்துகொண்டு மக்களுக்கு சேவை செய்வேன். கல்விக்கும் கற்றலுக்கும் வயது ஒரு தடை இல்லை. எல்லாவற்றையும் செய்ய மக்களை ஊக்குவிப்பேன்.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.