கொரோனா தடுப்பு மருந்து அனைத்து மக்களுக்கும் தேவைப்படாது .! பேராசிரியர் சுனித்ரா குப்தா.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியாவில், தினமும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்து அனைத்து மக்களுக்கும் தேவைப்படாது  என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணர் பேராசிரியர் சுனித்ரா குப்தா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஏற்கனவே சுவாச  கோளாறுகளால் அவதிப்படுவோர் மற்றும் வேறு சில முக்கிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் கொரோனா தடுப்பூசி தேவையை தவிர இளைய தலைமுறையினர் மற்றும் வேறு எந்தவித உடல் நோயால் பாதிக்கப்படாதவர்கள் கொரோனாவை நினைத்துப் பயப்பட வேண்டாம் என கூறினார்.

ஒரு சாதாரண ஃப்ளூ எப்படியோ, அப்படித்தான் கொரோனாவும் என தெரிவித்தார். கொரோனா படிப்படியாக வலுவிழந்து, காலப்போக்கில் ஒரு சாதாரண காய்ச்சல் என்றளவில் வலிமை குறைந்துவிடும் என பேராசிரியர் சுனித்ரா குப்தா கூறியுள்ளார்.

author avatar
murugan