கூட்டம் கூடுவதால் கொரோனா அதிகமாக பரவுகிறது – சுகாதாரத்துறை செயலர்

மதம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதால், கொரோனா அதிகமாக பரவுகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் அவர்கள், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மதம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதால், கொரோனா அதிகமாக பரவுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 32 மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைவாக இருந்தாலும், மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது என்றும், தமிழகத்தில் இன்னும் 6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டியுள்ளது என்றும், 11 மருத்துவ கல்லூரிகளில் ஆய்வு நடக்கிறது; அதன்பின் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.