மோடியின் ஜனநாயக விரோதப் போக்கை காங்கிரஸ் கட்சி அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்காது – கே.எஸ்.அழகிரி

மோடியின் ஜனநாயக விரோதப் போக்கை காங்கிரஸ் கட்சி அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்காது – கே.எஸ்.அழகிரி

Default Image

ஜனநாயகத்தின் தூணாக விளங்கக் கூடிய தேர்தல் ஆணையத்தை தன் கைப்பாவையாக மாற்ற முற்படும் மோடி ஜனநாயக விரோதப் போக்கை காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்க்காது. 

தலைமை தேர்தல் அதிகாரியை நியமித்தது தொடர்பாக மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டுள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து கே.எஸ்.அழகிரி அடுத்த மாதம் பணி ஓய்வு பெற வேண்டிய அருண் கோயலை விருப்ப ஓய்வு கொடுக்க வைத்து மறுநாளே தேர்தல் ஆணையராக நியமிக்க வேண்டிய கட்டாயம் என்ன என்பதை மோடி நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஜனநாயகத்தின் தூணாக விளங்கக் கூடிய தேர்தல் ஆணையத்தை தன் கைப்பாவையாக மாற்ற முற்படும் மோடியின் ஜனநாயக விரோதப் போக்கை காங்கிரஸ் கட்சி அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்காது. இந்த நியமனத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பது வரவேற்க்கதக்கது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Join our channel google news Youtube