100 யூனிட் மின்சாரத்தில் எந்த மாற்றமும் இல்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி

வீடுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமின்றி தொடரும்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவசமாக வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் மின்சாரத்தில், எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆகையால், வீடுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமின்றி தொடரும் என்றும் குடிசை, விவசாய மின் இணைப்புகளுக்கு தரப்படும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

மேலும், கைத்தறி, விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மானியமும் தொடரும். ஆதாரை இணைப்பதால் மின் நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் மின்சாரம், மானியத்தில் எந்த பாதிப்பு ஏற்படாது எனவும் குறிப்பிட்டார். இதனிடையே, மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அனைத்து பிரிவு மின்வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும் நவ.28 முதல் டிச.31 வரை பண்டிகை தினங்கள் தவிர்த்து அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Leave a Comment