காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேரம் எதிரொலி -இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் 

பெங்களூரில்  பிற்பகல் 3.30 மணிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்  நடைபெறுகிறது.

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காத 4 எம்.எல்.ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.விளக்கமளிக்க தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்..ரூ.50-70 கோடி வரை தருவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் பாஜகவினர் பேரம் பேசுகிறார்கள், அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

இந்நிலையில்  காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விலை பேசப்படுவதாக வந்த தகவல்களை அடுத்து இன்று பெங்களூரில்  பிற்பகல் 3.30 மணிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்  நடைபெறுகிறது.

Leave a Comment