கேரளாவில் தளபதி விஜய்க்காக அவரது ரசிகர்கள் செய்த அட்டகாசமான செயல்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.
இப்படம் பா தடைகளை தாண்டி நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில், கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள், சர்க்கார் பட வெளியீட்டு போது பிரமாண்டமான கட்டவுட் அடித்தனர். இந்த வருடம் பேனர் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிகில் பட வெளியீட்டை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் விஜய் சிலையை செய்து, விஜய் ரசிகர்களின் பார்வைக்காக வாகனத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்றுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.