டிஜிபி சம்பளம் குறித்த சர்ச்சை கருத்து.! எச்.ராஜா மீது போலீசில் புகார்.!

டிஜிபி சைலேந்திரபாபு, அரசிடம் சம்பளம் வாங்குகிறாரா அல்லது பி.எப்.ஐயிடம் சம்பளம் வாங்குகிறாரா தெரியவில்லை என பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காரைக்குடி டிஎஸ்பியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு, தமிழ்கத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் , மண்ணெண்ணை குண்டுகள் வீசப்பட்டன.

சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்து, பல்வேறு விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜகவினர் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவிக்கையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, ‘ டிஜிபி சைலேந்திரபாபு அரசாங்கத்திடம் சம்பளம் வாங்குகிறாரா? அல்லது பி.எப்.ஐ (அண்மையில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிராண்ட் ஆஃப் இந்தியா) விடம் சம்பளம் வாங்குகிறாரா என தெரியவில்லை.’  என பேசிவிடுவார்.

எச்.ராஜா பேசியது மிகுந்த சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து காரைக்குடி டிஎஸ்பியிடம் நவ்ஷாத் அலி என்பவர் புகார் அளித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment