#ElectionBreaking: 20 தொகுதிகளில் போட்டி., முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு – சகாயம் அதிரடி அறிவிப்பு.!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எனது அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அறிவிப்பு.

கடந்த மாதம் 21-ஆம் தேதி இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று தான் அரசியலுக்கு வருகிறேன் என்று விருப்ப ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், சகாயம் அரசியல் பேரவை, தமிழ்நாடு இளைஞர் கட்சி, வளமான தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து மொத்தம் 36 தொகுதிகளில் போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சகாயம் அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றும் அறிவித்துள்ளார். சகாயம் அரசியல் பேரவை போட்டியிடும் 20 தொகுதிகளின் 10 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். சகாயம் அரசியல் பேரவையுடன் இணைந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி 15 தொகுதிகளிலும், வளமான தமிழகம் 1 தொகுதிகளிலும் வரும் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி விட்டதால் புதிய கட்சி, புதிய சின்னம் பெற நேரம் இல்லாத சூழலில், கூட்டணியில் இருக்கும் 2 கட்சிகளின் சின்னத்தில் எங்களது இளைஞர்கள் களம் காண்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த தேர்தலுக்கு பிறகு அரசியல் கட்சி குறித்த முழுமையான நடவடிக்கைகள் இருக்கும் என்றும் வரும் தேர்தலில் நான் போட்டியிடவில்லை எனவும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்