இறுதி போட்டிக்கும் மகளிர் கிரிக்கெட்டிற்கும் ராசி இல்லை.. 3 முறை 2ஆம் இடம்.!

2017 ஒருநாள்  உலகக்கோப்பை தொடர், 2020 டி 20 உலகக்கோப்பை தொடர், தற்பட்டது 2022 காமன்வெல்த் இறுதி போட்டி இந்த 3 தொடர்களிலும் இறுதி போட்டி வரை சென்று கோப்பையை இழந்துள்ளளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. 

இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  இன்றுடன் அனைத்து போட்டிகளும் நிறைவடைந்துள்ளளது. இதில் இந்திய அணி நல்ல எண்ணிக்கையில் பதக்கங்களை வென்று வருகிறது.

இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பங்கேற்றது. அதில் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதியது.  கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்  தலைமையில் இந்திய அணி, ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் கேப்டன் லானிங் தலைமையில், போட்டியிட்டது டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. ஆனால், இந்திய அணி 19.3 ஓவர்களில் 152 ரன்களுக்கு மொத்த விக்கெட்டையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் காமன் வெல்த் 2022இல் இறுதி போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை பெற்றது.

இதே போல இதற்கு முன்னர் 2 முறை இறுதி போட்டிக்கு வந்து தோற்கடிக்கப்பட்டு, இரண்டாம் இடத்துடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெளியேறியுள்ளது.  2017ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதி இதே போல 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விகண்டது.

2020 டி 20 உலக்கோப்பை மகளிர் கிரிக்கெட்டின் இறுதி போட்டியில் இதே ஆஸ்திரேலிய அணியுடன் மோதி 85 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment