ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது – தமிழிசை

ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது என தமிழிசை ட்வீட். 

சமீப காலமாகவே ஆளுநருக்கு, திமுகவிற்கு இடையே மோதல் போக்கு நிகழ்ந்து வரும் நிலையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு திமுக கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதன்படி, ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி சென்றார்.

இந்த நிலையில், இதுகுறித்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.

மேலும், ஏன் மக்களை சந்திக்கின்றீர்கள் என்று கேட்பவர்களுக்கான பதில் இது; நல்லதை ஆளுநர் பேசக்கூடாது, நல்லதை ஆளுநர் செய்யக்கூடாது என்று கூறுவதை நான் எதிர்கிறேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment