சுழற்சி முறையில் 50% மாணவர்களுடன் வகுப்புகள் – அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டபின் வகுப்பில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டபின் வகுப்பில் சுழற்சி முறையில் முதல் நாள் 50%, 20 மாணவர்கள், அடுத்த நாள் 50% மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வு பொறுத்தளவில் கடந்த நவம்பர் மாதம் முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பாடம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், நீட் தேர்வை அழிக்க வேண்டும் என்பது தான் தமிழக ரசின் நிலைப்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்