இலங்கை அகதிகளின் குடியுரிமை விண்ணப்பங்கள்! மதுரை ஐகோர்ட் மத்திய அரசுக்கு உத்தரவு!

திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த, ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன் உள்பட 63 பேர் மதுரை ஐகோர்ட்டில் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக படகுகளில் வந்ததால், நாங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளோம். இந்திய குறியுரிமை கேட்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். இருப்பினும் எங்களுக்கு குடியுரிமை சான்று வழங்கப்படவில்லை. எங்களை அகதிகளாக  கருதாமல்,தாயகம் திரும்பியவர்களாக கருதி, இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் இந்திய குடியுரிமை கேட்டு, புதிதாக அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அவர்கள் தாமதம் இன்றி அந்த விண்ணப்பங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், மீது மத்தியஅரசு 16 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு, மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.