இந்திய பிரதமர் மோடியை விரும்பும் சீன மக்கள்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்திய பிரதமர் மோடியை விரும்பும் சீன மக்கள்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாட்டிலும் செல்வராக்கு அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். சீன மக்களில் ஏராளமானோர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகர்களாக உள்ளனர்.

சீனாவின் குளோபல் டைம்ஸ் நடத்திய ஆய்வில், ‘பெரும்பாலான சீனர்கள் தங்கள் சொந்த தலைவர்களை விட பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. கணக்கெடுப்பின்படி, சீன குடிமக்களில் சுமார் 50 சதவீதம் பேர் பெய்ஜிங்கிற்கு சாதகமான செல்வாக்கைக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் 50 சதவீத மக்கள் இந்திய மோடி அரசைப் பாராட்டியுள்ளனர்.

இந்தியாவில் சீனாவுக்கு எதிரான உணர்வு மிக அதிகமாக இருப்பதாக 70 சதவீதம் பேர் நம்புகின்றனர், அதே நேரத்தில் 30 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்படும் என்று கருதுகின்றனர்.

கணக்கெடுக்கப்பட்டவர்களில்  9% பேர் இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம் குறுகிய காலத்திற்கு இருக்கும் என்று நம்புகிறார்கள். அதே நேரத்தில் 25% இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நீண்ட காலமாக வலுவாக இருக்கும் என கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.