#TN Assembly:தமிழக சட்டப்பேரவையில் இன்று…புதிய அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர் ஸ்டாலின்!

சட்டப்பேரவையில் இன்று கைத்தறித்துறை மற்றும் வணிக வரித்துறை  மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.அதன்படி,மானியக்கோரிக்கை மீது கேள்விகள் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.குறிப்பாக,அரியலூர் சிமெண்ட் ஆலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து,எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்கவுள்ளனர். குறிப்பாக போலி பட்டாக்கள் பதிவு செய்வதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் விளக்கம் அளிக்க உள்ளார்.

மேலும்,தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு 2 ஆம் திருத்த சட்ட முன்வடிவு நிறைவேற்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி அனுமதி கோருவார் என்றும்,அதே சமயம்,தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவுக்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அனுமதி கோர உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,தமிழக சட்டப்பேரவை 110 விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.