வரும் ஜூலை 7 ஆம் தேதி திருவண்ணமலை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்றது முதல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று,புதிய அரசு திட்டங்களை தொடங்கி வைத்து,மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

இந்த நிலையில்,அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக வருகின்ற ஜூலை 7 மற்றும் 8 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருவண்ணாமலை செல்கிறார்.அப்போது, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே,அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக கடந்த ஜூலை 2 ஆம் தேதி கரூர் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,கரூரில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 28.60 கோடி செலவில் முடிவுற்ற 95 திட்டப் பணிகளை திறந்து வைத்து,ரூ. 581.44 கோடி மதிப்பீட்டிலான 99 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும்,80,750 பயனாளிகளுக்கு ரூ. 500.83 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment