தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா நாளை முதலமைச்சர் பழனிசாமி முக்கிய ஆலோசனை

இந்தியாவில் கொரனோ வைரஸ் இன் இரண்டாவது அலை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.மகாராஷ்டிரா, பஞ்சாப்,தமிழகம், மற்றும் கர்நாடகா உட்பட சில மாநிலங்களில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பரவி வரும் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்த பிரதமர் மோடி தலைமையில் அனைத்து முதல் அமைச்சர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் 2 நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து நாள் ஓன்றுக்கு 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.இதனை கட்டுப்படுத்து தமிழக சுகாதாரத்துறை  தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனைக்குப் பிறகு ஒரு சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk