அரசு பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு..!

மரக்காணம் அருகே கடப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மரக்காணம் செல்லும் வழியில் செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர், பள்ளி மாணவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார்.  அதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கான மதிய உணவையும் நேரில் பார்வையிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை இன்று மாலை முதல்வர் தொடங்கி வைக்கிறார். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக செங்கல்பட்டு சென்ற முதல்வர் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

author avatar
murugan