நாளை ஊரடங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

ஊரடங்கு தொடர்பாக நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். கொரோனா பெருந்தொற்று தமிழகத்தில் உச்சத்தில் இருந்ததையடுத்து, முதல்வர் மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு ஆகியவற்றால் படிப்படியாக குறைய தொடங்கியது.

ஊரடங்கால் கொரோனா  குறைய குறைய தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் போன்றவைகளுக்கு தற்போது வரை அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி தற்போது தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31 ஆம் தேதியோடு முடிவடைவதால் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கவுள்ளார். நாளை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை நடைபெறவுள்ளது.

மேலும், இதில் சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கு பெறவுள்ளனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக ஊரடங்கு குறித்த தகவலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.