கரூரில் 99 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

கரூரில் இன்று, திருமாநிலையூரில் ரூ.581 கோடி மதிப்பிலான 99 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்றது முதல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, முடிந்த நலத்திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக கரூர் மற்றும் நாமக்கல்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில், கரூரில் இன்று, திருமாநிலையூரில் ரூ.581 கோடி மதிப்பிலான 99 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். ரூ.28 கோடியில் முடிவுற்ற 95 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், இந்த நிகழ்வில், 80,750 பயனாளிகளுக்கு ரூ.500.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  வழங்கினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment