21 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

சென்னையில் தனியார் ஓட்டலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் முன்னிலையில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். ₹22,252 கோடி மதிப்பில் 21 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 17,654 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment