கால்நடைகளை சாலைகளில் உலவ விட்டால் அபராதம்! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை….

சென்னையில் கால்நடைகளை சாலைகளில் உலவ விட்டால், அவற்றின் உரிமையாளர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதுடன், பராமரிப்புக் செலவுக்கென 750 ரூபாய் வசூலிக்கப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பிடித்து வைக்கப்படும் கால்நடைகளின் காதுகளில் சீரியல் எண்களுடன் கூடிய tag ஒட்டப்படும். இனி இதுபோன்று சாலைகளில் கால்நடைகள் அவிழ்த்து விடப்படமாட்டாது என 20 ரூபாய் முத்திரைத் தாளில் உரிமையாளர் எழுதி கொடுத்தால் மட்டுமே கால்நடைகள் விடுவிக்கப்படும்.
ஒருமுறை பிடிபட்ட கால்நடைகள், மீண்டும் பிடிபட்டால் அவை உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது. இனி சாலைகளில் கால்நடைகளைக் காண்போர் 1913 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்து புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com

Leave a Comment