சென்னை மாநகராட்சி – திமுக கூட்டணியில் இடப்பங்கீடு?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் குறிப்பிட்ட இடங்களை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திமுக முடிவு.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி இடங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் இடையே உடன்பாடு என தகவல் வெளியாகியுள்ளது. 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 4, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கீடு என தகவல் கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 வார்டுகளும், மதிமுகவுக்கு 2 வார்டுகளும் கொடுக்க திமுக முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வார்டு எண் 193, 42 என 2 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடக்கூடிய கூட்டணி கட்சிகளுக்கான இட பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் குறிப்பிட்ட இடங்களை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகவும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தை மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்யுமாறு திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்