நிலவில் சந்திராயனை-2 வை தரையிறக்க இஸ்ரோ ஆயத்தம்!

நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்தியாவிலிருந்து இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலமாக சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அது முதலில் பூமியின் வட்டப்பாதையில் சுற்றி விட்டு தற்போது நிலவின் வட்டப்பாதையில் ஐந்து முறை சுற்றி அதன் நிலவின் தரை பகுதியை நெருங்கியுள்ளது.

தற்போது சந்திரன்-2,  ஆர்பிட்டல்லில் இருந்து விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள லேண்டரை பிரிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இதற்கான சமிக்ஞைகளை இஸ்ரோ தற்போது சந்திராயன்-2விற்கு அனுப்பியுள்ளது.

இந்த லேண்டரில் இருந்து பிரக்யான் எனும் ஆறு சக்கரம் கொண்ட பகுதி பிரிந்து நிலவின் வளங்களை ஆராயும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரக்யான் செப்டம்பர் 7ஆம்  தேதி களமிறங்கும் என கூறப்பட்டுள்ளது. தற்போது லேண்டர் இன்று மதியம் 1.45 மணிக்குள் தரையிறங்க படும் நிலை ஏற்படும் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.