வரலாறு காணாத வெள்ளத்தை எதிர்கொண்ட கேரளாவிற்கு மத்திய அரசு ரூ.3048 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு..!!

கேரளா கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் மாநிலமே நிலைகுழைந்தது என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு அம்மாநிலத்தில் உள்ள பலத்தரப்பட்ட மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர்.

இந்நிலையில் நாடே கேரளாவிற்கு கரம் கொடுத்தது.இதில் மக்கள் ,நடிகர்கள்,அரசியல் பிரபலங்கள் அண்டை நாடுகள் என அனைவரும் கரம் கொடுத்தனர்.இந்நிலையில் இந்த வெள்ளமானது அம்மாநிலத்தில் சுமார் ரூ.4700 கோடி அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.மேலும் இந்த நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.இந்நிலையில் கேரள வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு கேரளாவுக்கு ரூ.3048 கோடி ஒதுக்கியுள்ளது.

இந்த நிதியை மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3048 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.ஆனால் கேரள அரசு ரூ.4700 கோடி மத்திய அரசிடம் கேட்டு இருந்த நிலையில் ரூ.3048 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.