மெஸ்ஸிக்கு வழங்கப்பட்ட அரபு கருப்பு அங்கிக்கு, கோடிகள் கொடுத்து வாங்க தயார்- ஓமன் எம்.பி

உலகக்கோப்பை வெற்றியின்போது மெஸ்ஸிக்கு வழங்கப்பட்ட அரபு கருப்பு அங்கியை வாங்க விருப்பம் தெரிவித்த ஓமன் எம்.பி. கத்தாரில் நடந்த ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வென்ற அர்ஜென்டினா மற்றும் வீரர்களுக்கு உலகக்கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட லியோனல் மெஸ்ஸிக்கு, அரபு நாட்டில் அணியப்படும் பிஷ்ட் எனும் கருப்பு நிற அங்கியை கத்தார் மன்னர் வழங்கினார், மேலும் மெஸ்ஸி இந்த அங்கியை(பிஷ்ட்டை) அணிந்துகொண்டு கோப்பையை வாங்கினார். பிஷ்ட் என்பது அரபு நாடுகளில் பிரபலமான ஒரு பாரம்பரிய … Read more

மெஸ்ஸி, எமிலியானோவை அனுமதித்திருக்க கூடாது! இது அருவருப்பானது- மோர்கன்

எம்பாப்பேவை கேலி செய்ய எமிலியானோவை, மெஸ்ஸி ஏன் அனுமதிக்கிறார் என்று மோர்கன் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி பிரான்ஸை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் ஆனது. கோப்பையை வென்ற கையோடு திரும்பிய அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு அந்நாட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ், பிரான்ஸ் அணி வீரர் கைலியன் எம்பாப்பேவின் முகத்துடன் கூடிய குழந்தை பொம்மையை … Read more

“The GOAT” விவாதம் தீர்க்கப்பட்டது ட்வீட்டை நீக்கிய ஃபிஃபா.!

ஃபிஃபா அமைப்பானது “The GOAT” விவாதம் தீர்க்கப்பட்டது என்று ட்வீட் செய்து அதை நீக்கியுள்ளது. கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி, 36 வருடங்களுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் மெஸ்ஸி, 7 கோல்கள் அடித்து கோல்டன் பூட் வாங்கும் வாய்ப்பை 1 கோலில் தவற விட்டார். இருந்தும் மெஸ்ஸி கோல்டன் பால் விருது வென்றார். கால்பந்து உலகில் GOAT(Greatest Of All Time) எனப்படும் சிறந்த வீரர் யார் என்ற போட்டி மெஸ்ஸிக்கும், … Read more

கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டம்.! ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட அர்ஜென்டினா வீரர்கள்.!

அர்ஜென்டினாவில் கால்பந்தாட்ட வீரர்கள் உலக கோப்பையை வென்று அணிவகுத்து சென்றபோது கூட்டம் அதிகமானதால் ஹெலிகாப்டர் மூலமாக வீரர்கள் மீட்கப்பட்டனர்.  2022 ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் பிரான்ஸ் நாட்டை 4-2 என்கிற பெனால்டி ஷூட் கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி.  உலக கால்பந்தாட்ட சாம்பியன் பட்டத்தை வென்று நாடு திரும்பிய வீரர்களை வரவேற்க்க அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் மக்கள் வீதியெங்கும் திரண்டனர்.ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அவர்களை வாழ்த்தி வரவேற்றனர். … Read more

உலகக்கோப்பை பைனலில் மெஸ்ஸி அடித்த சர்ச்சை கோல்! செல்லாது என ரசிகர்கள் கதறல்.!

பிரான்சுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மெஸ்ஸி அடித்த சர்ச்சை கோல் செல்லாது என பிரெஞ்சு ரசிகர்கள் கூறி வருகின்றனர். கத்தாரில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலககோப்பையின் இறுதிப்போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் டை பிரேக்கரில் நடந்த பெனால்டி முறையில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணியின் 3-வது கோலாக மெஸ்ஸியின் இரண்டாவது கோல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. முதலில் அந்த கோல் ஆப்சைடு கோல் என கூறப்பட்டாலும் … Read more

ஃபிஃபா விதியை மீறி உலகக்கோப்பையை தொட்ட பிரபல செஃப்!வெடித்த சர்ச்சை, விமர்சித்த ரசிகர்கள்.!

ஃபிஃபா விதியை மீறி உலகக்கோப்பையை தொட்ட பிரபல செஃப், சால்ட் பே வை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பிரான்ஸை வென்று அர்ஜென்டினா அணி, சாம்பியன் பட்டம் வென்றது. கொண்டாட்டத்தில் மூழ்கிய ரசிகர்களுக்கு மத்தியில், பிரபல செஃப் ஆன சால்ட் பே என்றழைக்கப்படும் துருக்கியைச்சேர்ந்த நுஸ்ரத் கோக்சே, ஃபிஃபா விதியை மீறி உலகக்கோப்பையுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாவில் பகிர்ந்தது சர்ச்சையை கிளப்பையுள்ளது. பிரபல உணவகத்தை நடத்தி வரும் சால்ட் பே, அர்ஜென்டினா … Read more

Karim Benzema retires: சர்வதேச போட்டிகளில் இருந்து பென்சிமா ஓய்வு!

பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு. 2022 FIFA உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவிடம் பிரான்ஸ் தோல்வியடைந்த எதிரொலி காரணமாக நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனிடையே, உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வென்றது. இதனால் பிரான்ஸ் அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். … Read more

National holiday:இன்று அர்ஜென்டினாவில் பொதுவிடுமுறை வெற்றியை கொண்டாட தயாராகும் மெஸ்ஸி !

கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றதை அடுத்த இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்தின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி பிரான்ஸை 4-2 என்று டை-பிரேக்கரில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வெற்றிகொண்டாட்டமானது அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் கொண்டாடப்படுகிறது.இதில் மெஸ்ஸி தலைமையிலான  சாம்பியன் அர்ஜென்டினா கால்பந்து அணி கலந்து கொள்ள உள்ளது.

FIFA உலகக் கோப்பை: இந்தாண்டு அதிக கோல்கள் அடித்து சாதனை!

FIFA உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த சாதனை 2022ம் ஆண்டில் முறியடிப்பு. 2022-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்கோப்பை தொடர் நவம்பர் மாதம் 20ம் தேதியில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று, நேற்றுடன் நிறைவு பெற்றது. கத்தாரில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் த்ரிலான இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இது அர்ஜென்டினா அணியின் மூன்றாவது சாம்பியன் பட்டம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கோலாகலமாக இந்த வெற்றியை … Read more

ஃபிஃபா உலகக்கோப்பை, கூகுள் தேடல் 25 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சம்-CEO சுந்தர் பிச்சை

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவு கூகுள்தேடல் பதிவு என கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கத்தாரில் நேற்று நடந்த ஃபிஃபா உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி, பிரான்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் பெனால்டி முறையில் நடந்த டை-பிரேக்கரில் வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து நேற்று ஒருநாளில் கூகுளில் 25 வருடங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு, கூகுள்தேடல் புதிய உச்சத்தை அடைந்துள்ளதாக கூகுள் தலைமை நிர்வாக … Read more