“The GOAT” விவாதம் தீர்க்கப்பட்டது ட்வீட்டை நீக்கிய ஃபிஃபா.!

ஃபிஃபா அமைப்பானது “The GOAT” விவாதம் தீர்க்கப்பட்டது என்று ட்வீட் செய்து அதை நீக்கியுள்ளது.

கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி, 36 வருடங்களுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் மெஸ்ஸி, 7 கோல்கள் அடித்து கோல்டன் பூட் வாங்கும் வாய்ப்பை 1 கோலில் தவற விட்டார். இருந்தும் மெஸ்ஸி கோல்டன் பால் விருது வென்றார்.

கால்பந்து உலகில் GOAT(Greatest Of All Time) எனப்படும் சிறந்த வீரர் யார் என்ற போட்டி மெஸ்ஸிக்கும், ரொனால்டோவுக்கும் இடையே இருந்து வருகிறது. இந்த நிலையில் ஃபிஃபா, இறுதிப்போட்டியில் 2 கோல்கள் மற்றும் தொடரில் மொத்தம் 7 கோல்கள் அடித்து ஆட்டநாயகன் விருது வென்ற மெஸ்ஸிக்கு விருது வழங்கும் போது, GOAT விவாதம் தீர்க்கப்பட்டது என்று ட்வீட் செய்து அதை நீக்கியுள்ளது.

இதோ மெஸ்ஸி தான் அந்த GOAT என்பது போல் அந்த ட்வீட் இருந்தது குறிப்பிடத்தக்கது, ஆனால் ஃபிஃபா அந்த ட்வீட்டை பிறகு அழித்துவிட்டது. ரொனால்டோ, இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரேயொரு கோல் மட்டுமே அடித்துள்ளார், மேலும் 16 அணிகள் சுற்று மற்றும் காலிறுதியில் அவர் போர்ச்சுகல் அணியிலிருந்து வெளியே பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டிருந்தார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment