பிரதமர் மோடியின் ஆவணபடம் பற்றிய கருத்து.! காங்கிரஸ் முக்கிய பிரபலம் கட்சியில் இருந்து விலகல்.!

கேரள காங்கிரஸ் சமூக வலைதள பொறுப்பாளராக பதவியில் இருந்த அனில் ஆண்டனி, காங்கிரஸில் இருந்து விலகுவதாக டிவிட்டரில் அறிவித்துள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குஜராத் கலவரம் தொடர்பாக, பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனமான BBC ஓர் ஆவணப்படத்தை தயாரித்தது. இந்த  ஆவண படமானதுதவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கூறி,  மத்திய அரசு இந்த ஆவணப்படத்தை சமீபத்தில் தடை செய்தது. அனில் ஆண்டனி கருத்து : இது குறித்து கேரள காங்கிரஸ் சமூக வலைதள பொறுப்பாளராக பதவியில் இருந்த அனில் … Read more

புனே ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் மீட்பு..! 5 பேர் கைது..!

புனே ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதையடுத்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள பீமா ஆற்றங்கரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் இறந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் நான்கு பேரின் உடல்கள் ஜனவரி 18 மற்றும் ஜனவரி 22 க்கு … Read more

சிறப்பு விருந்தினரான எகிப்து அதிபரை பாரம்பரிய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி.!

எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசிக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி வரவேற்ற்றனர்.  நமது நாட்டின் 74 ஆவது குடியரசு தின விழா நாளை (ஜனவரி 26) இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசு இதற்கான முன்னேற்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.  அதேபோல, மத்திய அரசு, டெல்லியில் குடியரசு தின விழா ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது … Read more

குஜராத் கலவர கொலை வழக்கில் கைதானவர்கள் விடுதலை ..!

குஜராத் கலவரத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அனைவரையும் அம்மாவட்ட நீதிமன்றம் விடுவித்தது. குஜராத் : 2002 ஆம் ஆண்டு பஞ்சமஹால் மாவட்டத்தின் டெலோல் கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் அனைவரையும் அம்மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது. இவர்களில் … Read more

இடிந்து விழுந்த கட்டிடத்தில் 3 பேர் உடல்கள் கண்டுபிடிப்பு..! தீவிரமாகும் மீட்பு பணி..!

லக்னோவில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் 3 பேரின் உடல்கள் மீட்கபட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள வாசிர் ஹசன்கஞ்ச் சாலையில் குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது கட்டிடத்தில் இருந்து 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை கட்டிடத்தில் இருந்து 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் மேலும் … Read more

ஜனாதிபதியின் காவல் பதக்கங்கள் அறிவிப்பு…

21 காவலர்களுக்கு சிறந்த சேவைக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் ஜன.26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், சிறந்த சேவைக்கான ஜனாதிபதியின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினத்தன்று சிறந்த பணிக்கான பதக்கங்கள் மாநில போலீஸ் அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை வீரர்கள் மற்றும் ரயில்வே போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 21 காவலர்களுக்கு சிறந்த சேவைக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் காவல் பதக்கம் … Read more

சாலையில் ரூபாய் நோட்டுகளை தூக்கி எறிந்த நபர்..! போலீசார் விசாரணை..!

பெங்களூரு கேஆர் மார்க்கெட்டில் உள்ள மேம்பாலத்தில் இருந்து, ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த நபரிடம் போலீசார் விசாரணை.  பெங்களூரு கேஆர் மார்க்கெட்டில் உள்ள மேம்பாலத்தில் இருந்து, 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மேம்பாலத்தின் மீது ஏறி நின்று தன்னிடம் இருந்த 10 ரூபாய் நோட்டுகளை  கீழே எரிந்துள்ளார். அப்போது அங்கு மக்கள் கூட்டமாக இருந்த நிலையில் அப்பகுதியில் நின்ற மக்கள் ரூபாய் நோட்டுகளை கையில் பிடிக்கவும், அள்ளி எடுக்க முயற்சி செய்தனர். மேலும் அந்த வழியாக … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 89 பேர் கொரோனாவால் பாதிப்பு..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1922 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,737 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,49,547 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,20,32,75,159 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் … Read more

மும்பையில் முதல்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை..!

மும்பையில் முதல்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என மாநகராட்சி தகவல்.  கொரோனா தொற்றானது முதன்முதலில் சீனாவில் தான் கண்டறியப்பட்டது. இந்தத் தொற்று சீனாவில் பரவ தொடங்கியதையடுத்து உலக நாடுகள் முழுவதிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியது. மார்ச் 2020 ஆம் ஆண்டு இந்த தொற்று பாதிப்பு தீவிரமாக பரவ தொடங்கிய நிலையில் கோடிக்கணக்கான மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தும் உள்ளன. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளிலும்  … Read more

Republic day 2023 : சுதந்திரப் போராட்ட தலைவர்களின் உணர்ச்சிமிகு வீர முழக்கங்கள்..!

ஜனவரி 26, 1950 அன்று இந்திய நாடு குடியரசாக மாறியதைத் தொடர்ந்து 74-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்கள், போராட்டத்தில் பங்கேற்க மக்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு முழக்கங்களை கூறினார். இந்த முழக்கங்கள் இன்றும் மக்களிடம் தேசபக்தி உணர்வைத் தூண்டும் வகையில் இருந்து வருகிறது. அத்தகைய உணர்ச்சிமிகு முழக்கங்களில் சிலவற்றை பார்க்கலாம். 1. ஜெய் ஹிந்த் : “ஜெய் ஹிந்த்” என்ற முழக்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்டதாக அனைவரும் … Read more